மேலும் செய்திகள்
ஸ்ரீஐஸ்வர்யம் அவென்யூ திறப்பு விழா
4 hour(s) ago
பைக் மீது கார் மோதல் பிளம்பர் பலி: 3 பேர் காயம்
4 hour(s) ago
கடலுார்:கடலுார் மாவட்ட பாரதிதாசன் இலக்கிய மன்றம் சார்பில் ஆசிரியர் தினவிழா, நல்லாசிரியர்களுக்கு பாராட்டுவிழா, கட்டுரைப்போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா ஆகிய முப்பெரும் விழா நடந்தது. கடல் நாகராஜன் தலைமை தாங்கினார். கல்லுாரி முதல்வர் செந்தில்முருகன் முன்னிலை வகித்தார். மன்றச்செயலாளர் கலைச்செல்வி வரவேற்றார். விழுப்புரம் மாவட்ட பாவேந்தர் பேரவை செயலாளர் உலகதுரை செந்தில், புதுச்சேரி தமிழாசிரியர் குமாரக்கிருஷ்ணன் வாழ்த்துரை வழங்கினர். சேவை செய்த ஆசிரியர்களுக்கு சீனு அருள்ஜோதி, சந்தோஷம், அமராவதி ஆகியோர் பாராட்டப்பட்டனர். அஞ்சல்துறை ஓய்வு அப்துல்லத்தீப், பரிசு வழங்கி பாராட்டினார். சுரங்கத்துறை உதவி ஆணையர் சண்முகசுந்தரம் சிறப்புரையாற்றினார்.
4 hour(s) ago
4 hour(s) ago