உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / தில்லை கம்பன் கழகம் காலாண்டு கூட்டம்

தில்லை கம்பன் கழகம் காலாண்டு கூட்டம்

கடலுார் : சிதம்பரம் தில்லை கம்பன் கழகத்தின் காலாண்டு கூட்டத்தை முன்னிட்டு, சிறப்பு பட்டிமன்றம் நடந்தது.சிதம்பரம் மேல வீதி செந்தில் ஞானவேல் சிட்பண்ட் அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு, தில்லை கம்பன் கழக தலைவரும், செந்தில் ஞானவேல் சிட்பண்ட் நிர்வாக இயக்குனருமான சீனுவாசன் தலைமை தாங்கினார். கவுரவ தலைவர் ராமநாதன் முன்னிலை வகித்தார். செயலாளர் வேலாயுதம் வரவேற்றார். கயல்விழி சிவகுமார் இறைவாழ்த்து பாடினார். பொன்னம்பலம், அருள்பிரகாசம் வாழ்த்துரை வழங்கினர். இதில், கம்பனும், கோதையும் என்ற தலைப்பில் பேராசிரியர் கோகுலாச்சாரி, வள்ளுவன் போல், கம்பன் போல் என்ற தலைப்பில் முனைவர் பிரகாஷ் ஆகியோர் கம்பனை பற்றி சிறப்புரையாற்றினர்.கம்பன் கழக உறுப்பினர்கள், பொதுமக்கள், வர்த்தகர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். முனைவர் பட்ட ஆய்வா ளர் கீர்த்தனா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.தமிழ் ஆசிரியர் கல்யாணராமன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை