மேலும் செய்திகள்
பள்ளியில் திருக்குறள் பயிலரங்கம்
11-Mar-2026
கடலுார்: சிதம்பரம் அடுத்த கருப்பூர் அரசு உயர்நிலைப்பள்ளியில், உலக திருக்குறள் பேரவை சார்பில் திருக்குறள் பயிலரங்கம் நடந்தது. பள்ளி தலைமை ஆசிரியர் அறவாழி தலைமை தாங்கினார். தமிழ்ஆசிரியை மஞ்சுளா வரவேற்றார். மாணவ, மாணவிகளுக்கு திருக்குறள் ஒப்புவித்தல், திருக்குறள் வினாடி வினா போட்டிகள் நடத்தப்பட்டன. ஆசிரியர்கள் சுரேஷ், பிரகாஷ் போட்டியை ஒருங்கிணைத்தனர். உலக திருக்குறள் பேரவை கடலுார் மாவட்ட தலைவர் பாஸ்கரன் பங்கேற்று திருக்குறள் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு திருக்குறள் புத்தகம், சான்றிதழ் வழங்கி பாராட்டினார். ஆசிரியர்கள், மாணவர்கள் உட்பட பலர் பங்கேற்றனர். ஆசிரியை கீதா நன்றி கூறினார்.
11-Mar-2026