உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / வாலிபர்களை கட்டையால் தாக்கிய மூவருக்கு வலை

வாலிபர்களை கட்டையால் தாக்கிய மூவருக்கு வலை

கிள்ளை: இரு வாலிபர்களை கட்டையால் தாக்கிய, மூவரை போலீசார் தேடிவருகின்றனர். சிதம்பரம் அடுத்த கோவிலாம்பூண்டி மேலத்தெருவை சேர்ந்தவர் பாபுகணேஷ், 33; இவர், கடந்த 20ம் தேதி சி.முட்லுார் மண்டபம் டாஸ்மாக் கடையில், மதுபானம் வாங்கியப்போது, அம்பூட்டியபாளையம் கிராமத்தை சேர்ந்த அஜித்திற்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அங்கிருந்தவர்கள், இருவரையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். பாபுகணேஷ் மற்றும் அவரது உறவினர் சபாபதி, 32; இருவரும் வீட்டிற்கு சென்றபோது, கீழ் அனுவம்பட்டு கிராமம் அருகே அஜித் மற்றும் அவரது நண்பர்கள் சேர்ந்து, இருவரையும் கட்டையால் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தனர்.  அதில் படுகாயமடைந்த பாபுகணேஷ், சபாபதி இருவரும் சிதம்பரம் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்த புகாரின் பேரில் கிள்ளை போலீசார் வழக்கு பதிந்து, அஜித், அம்பூட்டியப்பாளையத்தை சேர்ந்த கார்த்திக், கலை ஆகிய மூவரை தேடிவருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை