மேலும் செய்திகள்
திரவுபதி அம்மன் கோவிலில் தீமிதி
14-Jun-2025
கடலுார்: கடலுார், புதுப்பாளையம் திரவுபதி அம்மன் கோவிலில் இன்று மாலை தீமிதி திருவிழா நடக்கிறது.கடலுார், புதுப்பாளையம் திரவுபதி அம்மன் கோவில் திருவிழா, கடந்த 22ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து தினசரி காலை திருமஞ்சனமும், மாலை மகாபாரத சொற்பொழிவும் நடந்தது. 27ம் தேதி, மாலை குத்துவிளக்கு பூஜை நடந்தது. கடந்த 8ம் தேதி, பகாசூரனுக்கு அன்னமளித்தல், 9ம் தேதி அர்ஜூனன் வில்வளைத்தல், திருக்கல்யாணமும், 10ம் தேதி அர்ஜூனன் தபசு, கண்ணபிரான் துாது, இரவு கரகத்திருவிழா, கண்ணன் தேர் நடத்தல், சுவாமி வீதியுலா நடந்தது. இன்று (11ம் தேதி) மாலை தீமிதி திருவிழாவும், இரவு சுவாமி வீதியுலாவும் நடக்கிறது.
14-Jun-2025