உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / வணிகர் சங்கங்களின் பேரமைப்பு; கடலுாரில் கண்டன ஆர்ப்பாட்டம்

வணிகர் சங்கங்களின் பேரமைப்பு; கடலுாரில் கண்டன ஆர்ப்பாட்டம்

கடலுார்; கடலுாரில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.மண்டல தலைவர் சண்முகம் தலைமை தாங்கினார். கடலுார் மாநகர தலைவர் துரைராஜ், மாவட்ட செயலாளர் வீரப்பன், மாநகர செயலாளர் சீனிவாசன், பொருளாளர் சேகர் முன்னிலை வகித்தனர். இதில், வாடகை கடைகளுக்கு 18 சதவீதம் ஜி.எஸ்.டி., விதிக்கப்பட்டதை கண்டித்தும், வீடு, கடைகளுக்கு 6 சதவீத சொத்து வரி உயர்வை வாபஸ் பெற வலியுறுத்தியும் கோஷங்கள் எழுப்பினர்.அப்போது, மாவட்ட இணை செயலாளர்கள் சுரேஷ், சதீஷ், சேம்பர் ஆப் காமர்ஸ் ராம்கி நாராயணன், பகுதி செயலாளர்கள் ராஜா, சன் பிரைட் பிரகாஷ், நிர்வாகிகள் சரவணன், பாலாஜி, செந்தில்குமார், விக்னேஷ், பாண்டியராஜன், வெங்கடேஷ், ரவிச்சந்திரன், விருத்தாசலம் மாவட்ட தலைவர் ராஜன், நகரத் தலைவர் கோபு, மாநில இணை செயலாளர் தங்கராசு, மாநிலத் துணைத் தலைவர் பழமலை மற்றும் பரங்கிப்பேட்டை தலைவர் ஆனந்த், இஸ்மாயில் மற்றும் மாவட்டம் முழுவதும் இருந்தும் வணிகர் சங்கங்களின் பேரமைப்பினர் கலந்து கொண்டனர்.பின், ஊர்வலமாக சென்று மத்திய ஜி.எஸ்.டி., மற்றும் கலால் துறை துணை ஆணையர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ