மூலிகை அழகு சாதன பொருள் பல்கலையில் பயிற்சி
கடலுார்: மூலிகை அழகு சாதனப் பொருட்கள் தயாரிப்பதற்கான தொழில்சார் பயிற்சி அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் வழங்கப்படவுள்ளது. இதுகுறித்து கலெக்டர் அலுவலக செய்திக்குறிப்பு: தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்கம் நிறுவனம், அண்ணாமலை புதுமை மற்றும் அடைகாக்கும் ஆராய்ச்சி அறக்கட்டளை ஆகியன இணைந்து, மூலிகை அழகு சாதனப் பொருட்கள் தயாரிப்பு குறித்து மூன்று நாள் தொழில்சார் பயிற்சி வரும் 18ம் தேதி முதல், 20ம் தேதி வரை நடக்கிறது. அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் செயல்படும் அண்ணாமலை புதுமை மற்றும் அடைகாக்கும் ஆராய்ச்சி அறக்கட்டளை வளாகத்தில் காலை 10:00 மணி முதல், மாலை 4.00 மணி வரை நடக்கிறது. பெண்கள், மாணவர்கள் மற்றும் தொழில் முனைவோர் அனைவருக்கும் இலவசமாக பயிற்சி வழங்கப்படுகிறது. பயிற்சியில் பங்கேற்க 9345543233 என்ற எண்ணில் தொடர்பு கொள்ள வேண்டும். பதிவு செய்வதற்கான கடைசி நாள் நாளை 17ம் தேதி ஆகும். இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.