திருநங்கை அடித்து கொலை
பரங்கிப்பேட்டை: திருநங்கையை அடித்துக் கொன்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். கடலுார் மாவட்டம், பரங்கிப்பேட்டை அடுத்த பு.முட்லுார் எம்.ஜி.ஆர்., சிலை அருகே டாஸ்மாக் மதுபான கடை பின்புறம் உள்ள சவுக்குதோப்பில் நேற்று காலை திருநங்கை இறந்து கிடப்பதாக, பரங்கிப்பேட்டை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் சென்று, முகம் சிதைந்த நிலையில் காணப்பட்ட திருநங்கை சடலத்தை மீட்டனர். விசாரணையில், நடுவீரப்பட்டு அடுத்த கொடுக்கன்பாளையம் கிராமத்தை சேர்ந்த கவியரசன், 40, என்பதும், திருநங்கையான இவர், குடிப்பழக்கம் உடையவர் என்பதும் தெரிந்தது.