உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / டாஸ்மாக் மதுபாட்டில் கடத்திய இருவர் கைது

டாஸ்மாக் மதுபாட்டில் கடத்திய இருவர் கைது

விருத்தாசலம்: விருத்தாசலம் அருகே பைக்கில் டாஸ்மாக் மதுபாட்டில் கடத்திச் சென்ற இருவரை போலீசார் கைது செய்தனர். விருத்தாசலம் சப் இன்ஸ்பெக்டர் சந்துரு தலைமையிலான போலீசார் நேற்று விளாங்காட்டூர் பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது, அவ்வழியாக வந்த பைக்கை சோதனை செய்தனர். அதில், கள்ளத்தனமாக டாஸ்மாக் மதுபாட்டில் கடத்திச் சென்றது கண்டுபிடிக்கப்பட்டது.இதுகுறித்து, விருத்தாசலம் போலீசார் வழக்குப் பதிந்து, விருத்தாசலம் ராமன் தெருவைச் சேர்ந்த வேல்முருகன், 42; வெங்கடேசன், 38, ஆகிய இருவரையும் கைது செய்தனர். மேலும், அவர்களிடம் இருந்த 48 குவாட்டர் பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ