சிறுமியரிடம் அத்துமீறல் இருவருக்கு போக்சோ
நெய்வேலி: கடலுார் மாவட்டம், குறிஞ்சிப்பாடி அருகே, கல்குணத்தை சேர்ந்தவர் மகாராஜன், 60. இவர், குறிஞ்சிப்பாடி அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த தம்பதியின், 8 மற்றும், 13 வயது மகள்கள் வீட்டில் தனியாக இருந்தபோது, சிறுமியரிடம் தவறாக நடக்க முயன்றார். சிறுமியரின் தாய் அளித்த புகாரில், நெய்வேலி மகளிர் போலீசார் போக்சோ வழக்கில் மகாராஜனை கைது செய்தனர். பெரம்பலுார் மாவட்டம், ஊத்தங்காலை சேர்ந்தவர் ஆச்சிமுத்து, 65. இவர், அதே பகுதியை சேர்ந்த 6 வயது சிறுமிக்கு, நேற்று மது போதையில் பாலியல் தொல்லை கொடுத்தார். அக்கம் பக்கத்தினர், ஆச்சிமுத்துவுக்கு தர்ம அடி கொடுத்து, பாடாலுார் போலீசில் ஒப்படைத்தனர். அவர் மீது, போக்சோ சட்டத்தில் வழக்கு பதிந்து, போலீசார் கைது செய் தனர்.