உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் /  இருதரப்பு மோதல் : 2 பேர் கைது 

 இருதரப்பு மோதல் : 2 பேர் கைது 

கடலுார்: தேவனாம்பட்டினத்தில் ஏற்பட்ட கோஷ்டி மோதலில், 2 பேரை போலீசார் கைது செய்தனர். கடலுார், தேவனாம்பட்டிணத்தைச் சேர்ந்தவர் அஞ்சாபுலி மகன் முத்தழகன்,27; இவர், நேற்று முன்தினம் தனது தாய் மஞ்சளாவுடன் வீட்டின் அருகில் பேசிக் கொண்டிருந்தார். அப்போது, அதே பகுதியை சேர்ந்த சசி மகன் சபினேஷ், அசோக், ஹரிஷ் ஆகியோர் பைக்கில் வேகமாக சென்றதை மஞ்சுளா தட்டிக் கேட்டதால் இருதரப்புக்கும் தகராறு ஏற்பட்டு இரும்பு பைப், கட்டையால் தாக்கிக் கொண்டனர். இந்த மோதலில் இரு தரப்பிலும் 3 பேர் காயமடைந்தனர். இதுகுறித்து இருதரப்பினரும் தனித்தனியே அளித்த புகாரின் பேரில், கடலுார் தேவனாம்பட்டினம் போலீசார் வழக்குப் பதிந்து சசி, 43; அசோக்,20; ஆகியோரை கைது செய்து, சபினேஷ், ஹரிஷ், ஜீவா, சஞ்சய் உட்பட 13 பேரை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !