பரங்கிப்பேட்டையில் உதயநிதி பிறந்த நாள்
பரங்கிப்பேட்டை: பரங்கிப்பேட்டையில், வடக்கு ஒன்றிய தி.மு.க., மற்றும் நகர தி.மு.க., சார்பில், தமிழக துணை முதல்வர் உதயநிதி பிறந்த நாளையொட்டி, அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு பால், பிரட், பிஸ்கட், கரிக்குப்பம் முதியோர் இல்லத்தில் அன்னதானம், பள்ளி மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டது.பரங்கிப்பேட்டை சேர்மன் தேன்மொழி சங்கர் தலைமை தாங்கினார். துணை சேர்மன் முகமது யூனுஸ், முன்னாள் துணை சேர்மன் செழியன், தி.மு.க., மாவட்ட பிரதிநிதி சங்கர், முன்னாள் நகர செயலாளர் முனவர் உசேன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அரசு மருத்துவமனை நோயாளிகளுக்கு, பரங்கிப்பேட்டை வடக்கு ஒன்றிய செயலாளர் முத்துபெருமாள் பால், பிஸ்கட் வழங்கினார்.நிகழ்ச்சியில் மருத்துவ அலுவலர் சுமதி, வர்த்தக சங்க தலைவர் ஆனந்தன், கவுன்சிலர்கள் ஜாபர் ஷரீப், பசிரியாமா ஜாபர்அலி, தையல்நாயகி கணேசமூர்த்தி, லலிதா, பொதுச் செயலாளர் சாலிஹ் மரைக்காயர், மாவட்ட மீனவரணி துணை அமைப்பாளர் அரவிந்தன், முன்னாள் நகர செயலாளர் பாண்டியன் உட்பட பலர் பங்கேற்றனர்.