உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / வாசவி அம்மன் ஜெயந்தி விழா 

வாசவி அம்மன் ஜெயந்தி விழா 

புவனகிரி : புவனகிரியில் ஆரிய வைசிய மகா சபை சார்பில் வாசவி கன்னிகா பரமேஸ்வரி அம்மன் ஜெயந்தி விழா நடந்தது.இதனையொட்டி நேற்று காலை 6:00 மணிக்கு பஜனை மடம் வரசித்தி விநாயகர் கோவிலில் இருந்து தீர்த்த குடங்களை ஆரிய வைசிய மடத்திற்கு பக்தர்கள் ஊர்வலமாக எடுத்து வந்தனர்.7:30 மணிக்கு அபிஷேக ஆராதனை, விசேஷ சோடஷ கௌரி பூஜைகள், தீபாராதனை நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது. இரவு 7:00 மணிக்கு அம்மன் வீதியுலா நடந்தது. ஏற்பாடுகளை ஆரிய மகா சபை தலைவர் சுந்தரேசன் தலைமையிலான விழா குழுவினர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை