வி.சி., கட்சியினர் புத்தாண்டு கொண்டாட்டம்
கடலுார்; வி.சி., கட்சியின் புத்தாண்டு காலண்டரை, அக்கட்சி தலைவர் வெளியிட்டார்.கடலுார் மாநகராட்சி துணை மேயர் தாமரைச்செல்வன், வி.சி., கட்சி சார்பில் காலண்டர் ஏற்பாடு செய்திருந்தார். இந்த காலண்டரை வி.சி., தலைவர் திருமாவளவன், நேற்று வெளியிட்டு, வாழ்த்து தெரிவித்தார். முன்னதாக புத்தாண்டு கேக் வெட்டி கொண்டாடப்பட்டது. அப்போது, மாநகர் மாவட்ட செயலாளர் செந்தில், நிர்வாகிகள் கஜேந்திரன், துரை,ராஜ்குமார், சலீம், வளவன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.