உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / வி.சி., கட்சி ஒன்றிய செயற்குழு கூட்டம்

வி.சி., கட்சி ஒன்றிய செயற்குழு கூட்டம்

ஸ்ரீமுஷ்ணம்: ஸ்ரீமுஷ்ணத்தில் வி.சி.,கட்சியின் ஒன்றிய செயற்குழு கூட்டம் நடந்தது.மாவட்ட செயலாளர் மணவாளன் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் ரவி, நிர்வாகிகள் வெற்றிவேந்தன், சக்திவேல் முன்னிலை வகித்தனர். நகர செயலாளர் குப்புசாமி வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக முதன்மைச் செயலாளர் பாவரசு கலந்து கொண்டு பேசினார்.வரும் மே 6ம் தேதி நடக்கும் தேர்தல் அங்கீகார வெற்றி விழா மற்றும் மே இறுதியில் நடக்கும் வக்ப் திருத்த சட்ட மசோதா எதிர்ப்பு பேரணியில் நிர்வாகிகள் திரளாக பங்கேற்பது உள்ளிட்ட தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.நிர்வாகிகள் சாமிதுரை, வீராசாமி, வினோத், அமுதமொழி, சந்தானகிருஷ்ணன், ஆனந்தமணி, பிரசாந்த், லட்சுமணன், அம்பலவாணன் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி