உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கால்நடை மருத்துவ முகாம் 

கால்நடை மருத்துவ முகாம் 

சேத்தியாத்தோப்பு: சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக வேளாண்புல இறுதியாண்டு மாணவி கள், கால்நடைத் துறையுடன் இணைந்து கால்நடை மருத்துவ முகாமிற்கு ஏற்பாடு செய்தனர்.வெய்யலுார் கால்நடை மருந்தகத்தில் நடந்த மருத்துவ முகாமினை அண்ணாமலை பல்கலைக்கழக வேளாண் கல்லுாரி இணை பேராசிரியர் தமிழ்செல்வி தலைமை தாங்கி துவக்கி வைத்தார். டாக்டர் வெங்கடேசன், இயற்கை விவசாயி ராமதாஸ் முன்னிலை வகித்தனர். கால்நடை மருத்துவர் விமல்ராஜ் வரவேற்றார்.மாணவிகள் நிவேதா, யாழினி, நிவேதிதா, நிவேதா, ஒளிர்மதி, வித்யா, ஓவியா உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !