உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / சிக்கன் கடையில் பணம் மோசடி சமூக வலைதளத்தில் வீடியோ வைரல்

சிக்கன் கடையில் பணம் மோசடி சமூக வலைதளத்தில் வீடியோ வைரல்

காட்டுமன்னார்கோவில்: காட்டுமன்னார்கோவில் சிக்கன் கடையில் ஜி பே மூலமாக வாலிபர் 4,400 ரூபாய் மோசடி செய்த வீடியோ சமூக வலை தளங்களில் வைரலானது.கடலுார் மாவட்டம், காட்டுமன்னார்கோவில், லால்பேட்டை பகுதியைச் சேரந்தவர் சர்புதின்,41; காட்டுமன்னார்கோவில் பழைய கருவூலம் அருகில் சிக்கன் கடை நடத்தி வருகிறார். வழக்கம் போல் நேற்று காலை கடையில், வியாபாரம் செய்து கொண்டிருந்தார்.அப்போது, கடைக்கு இரண்டு பைக்கில் வந்த மூன்று வாலிபர்களில் ஒருவர், தனது வீட்டில் நடைபெறும் விஷேசத்திற்கு 20 கிலோ சிக்கன் ஆர்டர் செய்தார். இதற்கான தொகை 4,400 ரூபாயை ஜி-பே மூலம் அனுப்பிய குறியீடு மற்றும் அதே தொகை கொண்ட ஸ்கிரீன் ஷாட்டை மர்ம நபர் தன் மொபைலில் காட்டினார். இதை நம்பி சர்புதீன் சிக்கனை கொடுத்ததும் மூவரும் சென்றனர். சிறிது நேரம் கழித்து சர்புதீன், வரவு செலவு கணக்கை சரிபார்த்த போது, இளைஞர்கள் வாங்கிய சிக்கனுக்கான தொகை 4,400 ரூபாய் கணக்கில் வரவு இல்லாததை கண்டு அதிர்ச்சியடைந்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான நிலையில் வியாபாரிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சர்புதீன் கடையில் உள்ள 'சிசிடிவி' யில் பதிவான காட்சிகள் அடிப்படையில் இளைஞர்களை வியாபாரிகள் தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை