உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கிராம சபை கூட்டம்; கிராம மக்கள் புறக்கணிப்பு

கிராம சபை கூட்டம்; கிராம மக்கள் புறக்கணிப்பு

புதுச்சத்திரம்; புதுச்சத்திரம் அடுத்து சிலம்பங்கலம் ஊராட்சியில் இரண்டு கிராம மக்கள் கிராம சபை கூட்டத்தை புறக்கணித்தனர்.கடலுார் மாவட்டம் பரங்கிப்பேட்டை ஊராட்சிக்கு உட்பட்ட செல்வி மங்கலம் ஊராட்சியில் நேற்று கிராம சபை கூட்டம் நடந்தது. இதில் அப்பகுதியைச் சேர்ந்த ஒருவர் தோப்பு புறம்போக்கு இடத்தினை பல ஆண்டுகளாக அனுபவித்து வருவதாகவும் அந்த இடத்தில் ஊராட்சி மன்ற கட்டடம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.விழுப்புரம் -நாகை நான்கு வழிச்சாலையில் செல்லும் மங்கலத்தில் இருந்து சாமியார் பட்டி செல்வதற்கு நெடுஞ்சாலையின் குறுக்கே பாதை அமைத்து தர வலியுறுத்தியும் சாமியார்பேட்டை மற்றும் சிலம்பிமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் கிராம சபை கூட்டத்தை நேற்று புறக்கணித்தனர். தொடர்ந்து அதே ஊராட்சி சேர்ந்த சின்னாண்டிக்குழி மற்றும் ஆத்துமேட்டு பகுதியைச் சேர்ந்த சுமார் 50 பொதுமக்களை கூட்டி வந்து பரங்கிப்பேட்டை வட்டார வளர்ச்சி அலுவலர் தட்டச்சர் ரேவதி தலைமையில் கிராம சபை கூட்டம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ