மனைப்பட்டா கோரி கிராம மக்கள் மனு
கடலுார்: கடலுார் கலெக்டர் அலுவலகத்தில் மனைப்பட்டா வழங்க கோரி கிராம மக்கள் மனு அளித்தனர். கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்த குறைகேட்பு கூட்டத்தில் ஸ்ரீமுஷ்ணம் அடுத்த மழவராயநல்லுார் கிராம மக்கள் அளித்த மனு: மழவராயநல்லுார் கிராமத்தில் எம்.ஜி.ஆர்., நகரில் 75 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் பல ஆண்டுகளாக வசிக்கின்றனர். மனைப்பட்டா கேட்டு அதிகாரிகளிடம் பல முறை மனு அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. மனைப்பட்டா அவசியம் தேவைப்படுகிறது. இனியாவது வீட்டுமனைப்பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.