உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மனைப்பட்டா கேட்டு கிராம மக்கள் மனு

மனைப்பட்டா கேட்டு கிராம மக்கள் மனு

சிதம்பரம் : சிதம்பரம் அடுத்த எருக்காட்டுப்படுகை கிராம மக்கள் வீட்டுமனை பட்டா கேட்டு தாசில்தார் கீதா விடம் மனு அளித்தனர். மா.கம்யூ., மாவட்ட செயற்குழு உறுப்பினர் ராமச்சந்திரன், குமராட்சி ஒன்றிய கவுன்சிலர் மாசிலாமணி ஆகியோர் தலைமையில் கிராம மக்கள் அளித்த மனு: எருக்ககாட்டு படுகை கிராமத்தின் சாலையோரத்தில் அரசு புறம்போக்கு இடத்தில் குடிசை போட்டு கடந்த 60 ஆண்டுகளுக்கு மேலாக 40க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வாழ்ந்து வருகிறோம். எங்களுக்கு மின் இணைப்பு, ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்டவைகள் இதே முகவரியில் தான் உள்ளது. நாங்கள் வசிக்கும் இடத்திற்கு பட்டா அல்லது மாற்று இடம் வழங்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை