உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த பணி பா.ம.க.,-தே.மு.தி.க.,-த.வெ.க., அப்செட் 

வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த பணி பா.ம.க.,-தே.மு.தி.க.,-த.வெ.க., அப்செட் 

தமிழகத்தில் வரும் 2026ம் சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. இதற்காக இந்திய தேர்தல் ஆணையம் விரிவான ஏற்பாடுகளை செய்து வருகிறது. குறிப்பாக, தமிழகத்தில், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி நடந்து வருகிறது. மாவட்டத்தில், கடலுார், பண்ருட்டி, குறிஞ்சிப்பாடி, நெய்வேலி, விருத்தாசலம், காட்டுமன்னார்கோவில் (தனி) திட்டக்குடி (தனி), சிதம்பரம், புவனகிரி என 9 சட்டசபை தொகுதிகள் உள்ளன. சட்டசபை தொகுதி வாரியாக ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள் வீடு வீடாக சென்று, விண்ணப்பம் வழங்கி வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணி மேற்கொண்டு வருகின்றனர். தேர்தல் ஆணையத்தால் அங்கீரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளான தி.மு.க.,-அ.தி.மு.க.,-காங்.,- இந்திய கம்யூ.,-மா.கம்யூ.,-வி.சி., உள்ளிட்ட,12 கட்சிகளின் பூத் ஏஜன்ட்டுகள், ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்களுக்கு உதவியாக ஆர்வத்துடன் சென்று வீடு வீடாக சென்று, விண்ணப்பம் வழங்கி வருகின்றனர். ஆனால், தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்படாத பா.ம.க.,-தே.மு.தி.க., உள்ளிட்ட கட்சிகளும், புதியதாக பதிவு செய்துள்ள த.வெ.க.. கட்சியும் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணியில் ஈடுபட முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால் அந்த கட்சிகளின் பூத் ஏஜன்ட்டுகள் 'அப்செட்' ஆகியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி