காத்திருப்பு போராட்டம்
திட்டக்குடி: திட்டக்குடி வட்ட அனைத்து கிராம உதவியாளர்கள் மற்றும் ஊழியர்கள் சங்கம் சார்பில், காத்திருப்பு போராட்டம் நடந்தது. தாலுகா அலுவலகம் முன் நடந்த போராட்டத்திற்கு, வட்ட தலைவர் மாரிமுத்து தலைமை தாங்கினார். துணை தலைவர் பாலசுப்ரமணியன், செயலாளர் ராமர், பொருளாளர் வெங்கடேசன் முன்னிலை வகித்தனர். ஆறுமுகம் வரவேற்றார். கிராம உதவியாளர்கள் செல்வகுமார், சரஸ்வதி, சங்கீதா உட்பட பலர் பங்கேற்றனர். இதில், வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழ ங்க வேண்டும், பணியின்போது இறந்தவர்களின் குடும்ப வாரிசு தாரர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் பணி வழங்குவது உட்பட பல கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடந்தது.