காத்திருப்பு போராட்டம்
சிதம்பரம்: சிதம்பரத்தில் வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் காத்திருப்பு போராட்டம் நடந்தது. தாசில்தார் அலுவலக வாயிலில் நடந்த காத்திருப்பு போராட்டத்திற்கு, கிராம நிர்வாக அலுவலர் சங்க மாநிலத் துணைத் தலைவர் ஜான்போஸ்கோ தலைமை தாங்கினார். மாநில இணை ஒருங்கிணைப்பாளர் ரவி, மாவட்ட தலைவர் அலெக்சாண்டர் உட்பட பலர் கலந்து கொண்டனர். ஒன்பது அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.