உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கிராம சபை கூட்டத்தில் பட்டா கேட்டு வெளிநடப்பு

கிராம சபை கூட்டத்தில் பட்டா கேட்டு வெளிநடப்பு

நடுவீரப்பட்டு : நடுவீரப்பட்டு அருகே அரசு நிலத்திற்கு பட்டா கேட்டு கொடுக்கன்பாளைம் ஊராட்சி மக்கள் கிராம சபைக் கூட்டத்தில் வெளிநடப்பு செய்ததால் பரபரப்பு நிலவியது. நடுவீரப்பட்டு அடுத்த கொடுக்கன்பாளையம் ஊராட்சியில் உலக தண்ணீர் தினத்தையொட்டி கிராம சபைக் கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்தில் ஊராட்சி செயலர் லட்சுமி தீர்மானம் வாசிக்க முயன்ற போது, '50க்கும் மேற்பட்டோர் இப்பகுதியில் பல ஆண்டுகளாக பயன்பாட்டில் உள்ள 165 ஏக்கர் அரசு நிலத்திற்கு பட்டா வழங்க தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்' என்றனர். இதற்கு ஊராட்சி செயலர் லட்சுமி, இது தொடர்பாக கடலுார் ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் தான் முடிவு செய்ய வேண்டும் எனக் கூறியதால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்ததால் பரபரப்பு நிலவியது. இதனையறிந்த ஊராட்சி அதிகாரிகள், பட்டா வழங்க தீர்மானம் நிறைவேற்ற உத்தரவிட்டனர். அதன்படி தீர்மானம் நிறைவேற்றப்பட்டதும் கிராம மக்கள் கலைந்துச் சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி