உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மாவட்டத்தில் பரவலாக மழை உளுந்து அறுவடை பணி பாதிப்பு

மாவட்டத்தில் பரவலாக மழை உளுந்து அறுவடை பணி பாதிப்பு

கடலுார்: கடலுார் மாவட்டத்தில் கடும் வெயில் தாக்கம் இருந்த நிலையில் நேற்று காலை பரவலாக மழை பெய்து குளிர்ந்த காற்று வீசியதால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர். கடலுார் மாவட்டத்தில் கோடை காலம் துவங்கும் முன்னரே கடும் வெயில் தாக்கம் காணப்பட்டது. மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக 95 டிகிரி அளவில் கடும் வெயில் தாக்கம் இருந்ததால் பொதுமக்கள் அவதியடைந்தனர். வங்கக்கடலில் ஏற்பட்ட கிழக்கு காற்று வலி மண்டல அழுத்தம் காரணமாக மழை பொழிவு ஏற்பட்டது. நேற்று காலை வழக்கம் போல் வெயில் காணப்பட்டது. பின், கருமேகம் சூழந்து மழை பெய்தது. கோடை காலம் துவங்கியதும் முதல் மழை கடலுார், விருத்தாசலம், நெய்வேலி, ஸ்ரீமுஷ்ணம், டெல்டா பகுதியான சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் பெய்தது. கோடை மழை நன்பகல் வரை நீடித்தது. இதனால் வெப்பம் குறைந்து குளிர்ச்சியான காற்று வீசியதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பம் சுற்றுவட்டார பகுதிகளில் 2 செ.மீ.அளவுக்கு திடீரென மழை பெய்ததால் பூமி குளிர்ச்சியானது. குறுவை பட்டத்தில் பல ஆயிரம் ஏக்கர் பரப்பில் விவசாயிகள் நெல் நடவு செய்துள்ளனர். இது நெல் பயிருக்கு பயனுள்ளதாக இருக்கும் என்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

அறுவடை பணிகள் பாதிப்பு

சேத்தியாத்தோப்பு, புவனகிரி, கீரப்பாளையம், காட்டுமன்னார்கோவில், ஸ்ரீமுஷ்ணம், கம்மாபுரம் ஆகிய வட்டாரங்களில் சம்பா பருவ நெல் அறுவடையையொட்டி விவசாயிகள் நிலங்களில் பச்சை பயறு, உளுந்து ஆகியவை விதைப்பு செய்திருந்தனர். கடந்த வாரத்தில் பச்சை பயறு, உளுந்து அறுவடை பணிகள் துவங்கி தீவிரமாக நடந்து வரும் நிலையில் நேற்று காலை 9:30 மணிக்கு திடீரென மழை பெய்தது. இதனால், அறுவடை பணிகள் பாதிக்கப்பட்டன. மழையால் பச்சை பயறு செடிகளை இயந்திரங்களில் அடிக்க முடியாமல் போனது. நிலத்தில் தண்ணீர் நிற்கும் அளவிற்கு கனமழை பெய்ததால் அறுவடை செய்யாமல் உள்ள பச்சை பயறு, உளுந்து செடிகள் அழுகும் நிலை ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ