உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / பெண்ணாடத்தில் தீயணைப்பு நிலையம் அமைக்கப்படுமா?

பெண்ணாடத்தில் தீயணைப்பு நிலையம் அமைக்கப்படுமா?

பெண்ணாடம் : பெண்ணாடத்தில் தீயணைப்பு நிலையம் அமைக்க, சுற்றியுள்ள 30க்கும மேற்பட்ட கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.மாவட்டத்தில், பெண்ணாடம் குறுவட்டம் தலைமையிடமாகவும், தேர்வுநிலை பேரூராட்சியாகவும் உள்ளது. இதனைச் சுற்றி திருமலை அகரம், கோனுார், வடகரை, நந்திமங்கலம், பெ.பூவனுார், அரியராவி, சவுந்திரசோழபுரம், செம்பேரி, தாழநல்லுார், கொத்தட்டை, பெ.பொன்னேரி, கொசப்பள்ளம், முருகன்குடி உட்பட 30க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளது. இப்பகுதிகளில் அதிக அளவில் கூரை வீடுகள் உள்ளன.கிராமங்களில் தீ விபத்து மற்றும் பேரிடர் காலங்களில், மீட்பு பணிக்காக 15 கி.மீ., துாரமுள்ள திட்டக்குடி, விருத்தாசலம் மற்றும் 20 கி.மீ., துாரமுள்ள வேப்பூர் தீயணைப்பு நிலையங்களில் இருந்துதான் தீயணைப்பு வீரர்கள் வர வேண்டிய நிலை உள்ளது. அதற்குள் சேதம் அதிகமாவதுடன் உயிரிழப்பு ஏற்படுவது தொடர்கிறது. பெண்ணாடத்தில் தீயணைப்பு நிலையம் அமைக்க வேண்டும் என, இப்பகுதி கிராம மக்கள் மற்றும் அரசியல் கட்சியினர் அதிகாரிகளுக்கு கோரிக்கை வைத்தும் இதுவரையில் அமைக்கப்படவில்லை. தீ விபத்து சேதங்கள் ஏற்படுவது மட்டும் தொடர்கிறது.எனவே, பெண்ணாடத்தில் தீயணைப்பு நிலையம் அமைக்க மாவட்ட நிர்வாகம், தீயணைப்புத்துறை அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ