சாலையோர மரங்கள் அகற்றப்படுமா?
புதுச்சத்திரம்: வில்லியநல்லுார்- ராமநாதன்குப்பம் சாலையின் ஓரத்தில் மரங்கள் படர்ந்துள்ளதால், வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. வில்லியநல்லுார்- ராமநாதன்குப்பம் பகுதியை இணைக்கும் இணைப்பு சாலை வழியாக பூவாலை, அலமேல்மங்காபுரம், பால்வாத்துண்ணான், வேளங்கிப்பட்டு, மணிக்கொல்லை உள்ளிட்ட கிராம மக்கள் சைக்கிள், பைக், கார் உள்ளிட்ட வாகனங்களில் புதுச்சத்திரம் பகுதிக்கு சென்று வருகின்றனர். இச்சாலையில் மின் விளக்கு வசதிகள் கிடையாது. மேலும், சாலையின் இருபுறமும் மரங்கள் வளர்ந்து படர்ந்துள்ளது. இதனால் எதிரில் வரும் வாகனங்கள் தெரியாமல் , வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்கிக் கொள்ளும் நிலை உள்ளது. எனவே வாகன ஓட்டிகளின் நலன் கருதி வில்லியநல்லுார்- ராமநாதன்குப்பம் சாலையோரம் படர்ந்துள்ள, மரங்களை வெட்டி அகற்ற வேண்டும்.