மேலும் செய்திகள்
அரசு அலுவலர்களிடம் பெண் வாக்குவாதம்
07-Oct-2025
கடலுார்: சொத்தை அபகரிக்க முயற்சிக்கும் கணவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி கலெக்டர் அலுவலகத்தில் பெண் கதறி அழுததால் பரபரப்பு ஏற்பட்டது. கடலுார் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்த மக்கள் குறைகேட்பு கூட்டத்திற்கு வந்த 45 வயது மதிக்கத்தக்க பெண் திடீரென கதறி அழுததார். பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், பெண்ணை சமாதானம் செய்து, விசாரணை நடத்தினர். அப்பெண் திட்டக்குடி பகுதியை சேர்ந்தவர் என்பதும், சொத்தை அபகரிக்க தன்னை ஆபாசமாக சித்தரித்து சமூக வலைதளங்களில் வெளியிட்ட கணவர் மீது நடவடிக்கை கோரி மனு அளிக்க வந்தது தெரிந்தது. இதையடுத்து அவரை கலெக்டரிடம் மனு அளிக்க போலீசார் அனுப்பி வைத்தனர்.
07-Oct-2025