உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் /  ஆட்டோ மோதி தொழிலாளி பலி

 ஆட்டோ மோதி தொழிலாளி பலி

பண்ருட்டி: பண்ருட்டி, திருக்காமு தெருவை சேர்ந்தவர் யுவராஜ்,34; கூலித் தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் இரவு மணி நகர் ஆஞ்சநேயர் கோவில் அருகில் மொபட்டில் சென்று கொண்டிருந்தார். அப்போது, எதிரில் வந்த ஆட்டோ மோதியதில் யுவராஜ் பலத்த காயமடை ந்தார். உடன், அருகில் இருந்தவர்கள் மீட்டு பண்ருட்டி அரசு மருத்துமவனையில் சேர்த்தனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள், ஏற்கனவே யுவராஜ் இறந்து விட்டதாக கூறினர். இதுகுறித்த புகாரின் பேரில், பண்ருட்டி போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ