உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் /  ஜீப் மோதி தொழிலாளி பலி

 ஜீப் மோதி தொழிலாளி பலி

வடலுார்: வடலுார் அடுத்த மருவாய் கிராமத்தை சேர்ந்தவர் சக்திவேல், 55; கூலித்தொழிலாளி. இவர் நேற்று முன்தினம், வி.கே.டி சாலையில் மருவாய் பஸ் நிறுத்தம் அருகே சாலையை கடந்து நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த ஜீப், சக்திவேல் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த அவரை, கடலுார் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு சக்திவேல் இறந்தார். வடலுார் போலீசார் வழக்கு பதிந்து, விபத்து ஏற்படுத்திய வடலுார் ஆர்.சி காமராஜ் நகரை சேர்ந்த அர்ச்சுனன் என்பவர் மீது வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை