உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / உலக மண் வள தின விழா

உலக மண் வள தின விழா

ஸ்ரீமுஷ்ணம் : ஸ்ரீமுஷ்ணம் அருகே உலக மண் வள தின விழா நடந்தது.ஸ்ரீமுஷ்ணம் அடுத்த ஸ்ரீ ஆதிவராகநல்லுாரில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைத்த வேளாண் வளர்ச்சி திட்டம் சார்பில் நடந்த விழாவிற்கு, வட்டார வேளாண் உதவி இயக்குனர் கீதா தலைமை தாங்கினார். விருத்தாசலம் அறிவியல் நிலைய தலைவர் மற்றும் பேராசிரியர் நடராஜன் பேசினார்.விழாவில், விவசாயிகளுக்கு மண் மாதிரி எடுப்பதன் முக்கியத்துவம், மண் மாதிரி எடுக்கும் முறை குறித்து செயல் விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து மண் மாதிரி எடுத்த விவசாயிகளுக்கு மண் வள அட்டைகள் வழங்கப்பட்டது.உதவி வேளாண் அலுவலர் பாலச்சந்திரமூர்த்தி, முன்னோடி விவசாயி பரமானந்தம், வட்டார தொழில்நுட்ப மேலாளர் பாக்யராஜ், உதவி தொழில் நுட்ப மேலாளர் பாலமுருகன், ராஜவேல், பயிர் அறுவடை பரிசோதனையாளர் சுரேஷ் மற்றும் 40 க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை