உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / பைக் மோதிய தகராறு வாலிபர் கைது

பைக் மோதிய தகராறு வாலிபர் கைது

புதுச்சத்திரம்: பைக்கின் பின்னால் மோதியதால் ஏற்பட்ட தகராறில், வாலிபரை போலீசார் கைது செய்தனர்.பரங்கிப்பேட்டை பெரிய மதகை சேர்ந்தவர் சீனிவாசன் மகன் சாரதி, 20; இவர் தனது நண்பர்களான பெரிய குமட்டியைச் சேர்ந்த கந்தன் மகன் சதீஷ்குமார், பூராசாமி மகன் கந்தன் மூவரும் பைக்கில் சின்னாண்டிக்குழி சென்றபோது, பின்னால் வந்த வேளங்கிப்பட்டைச் சேர்ந்த முத்தையன் மகன் முகில், சாரதியின் பைக்கில் இடித்துவிட்டார். இதனால் இவர்களுக்குள் வாய்தகராறு ஏற்பட்டது.இதில் ஆத்திரமடைந்த முகில் ஆதரவாளர்கள் மதி, தினகரன், அஜய், ஆதவன், உதயவேல், தனுஷ்உள்ளிட்ட 12 பேர் சேர்ந்து சாரதி, சதீஷ்குமார், கந்தன் மூவரையும் தாக்கினர்.இது குறித்த புகாரின்பேரில் புதுச்சத்திரம் போலீசார் வழக்கு பதிந்து முகில், 18; கைது செய்து மற்றவர்களை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ