ரயிலில் இருந்து விழுந்து இறந்த வாலிபர் அடையாளம் தெரிந்தது
பெண்ணாடம்:பெண்ணாடம் ரயில் நிலையத்தில் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்து இறந்தவர் அடையாளம் தெரிந்தது. விழுப்புரம் - திருச்சி ரயில் பாதையில் பெண்ணாடம் ரயில் நிலையத்தில் நேற்று முன்தினம் இரவு 10:30 மணிக்கு 37 வயது மதிக்கத்தக்க வாலிபர் இறந்து கிடந்தார். விருத்தாசலம் ரயில்வே சப் இன்ஸ்பெக்டர் ரவிக்குமார் தலைமையிலான போலீசார் உடலை மீட்டு, விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வழக்கு பதிந்து இறந்தவர் யார் என்பது குறித்து விசாரித்தனர். அதில், இறந்தவர் திருச்சி, மன்னார்புரத்தைச் சேர்ந்த குமார் மகன் விக்னேஷ், 34, என்பதும். சென்னையில் இருந்து பல்லவன் எக்ஸ்பிரஸ் ரயிலில் திருச்சி சென்றபோது, பெண்ணாடம் ரயில் நிலையம் அருகே தவறி கீழே விழுந்து இறந்தது தெரிய வந்தது. அதனைத் தெடார்ந்து அவரது உடல், அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.