உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கடலில் சிக்கிய வாலிபர் மீட்பு

கடலில் சிக்கிய வாலிபர் மீட்பு

புதுச்சத்திரம், மே 26-புதுச்சத்திரம் அருகே கடலில் குளித்தபோது, அலையில் சிக்கிய வாலிபரை கடலோர காவல் படையினர் மீட்டனர். புதுச்சத்திரம் அடுத்த பரங்கிப்பேட்டையை சேர்ந்தவர் ரமேஷ் மகன் கணேஷ், 22; இவர் புதுச்சத்திரம் அடுத்த சாமியார்பேட்டை கடற்கரையில், நேற்று மாலை சுமார் 6.00 மணிக்கு குளித்துக் கொண்டிருந்தார். அப்போது, திடீரென ராட்சத அலையில் சிக்கி கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டார். இவரின் அலறல் சத்தம் கேட்கவே அருகில் இருந்த கடலோர காவல் படையினர் கடலில் இறங்கி மீட்டனர். பின், சிதம்பரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை