உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மண்டல அபிேஷகம் நிறைவு

மண்டல அபிேஷகம் நிறைவு

நெய்வேலி : வேலுடையான்பட்டு கோயில் மண்டலாபிஷேகம் நிறைவு. நெய்வேலி வேலுடையான்பட்டு சிவசுப்ரமணியசுவாமி கோயில் கும்பாபிஷேகத்தையொட்டி நடந்த மண்டலாபிஷேகம் நேற்று நிறைவு பெற்றது. கடலுார் மாவட்டம் நெய்வேலி வேலுடையான்பட்டு முருகன் கோயிலில் கடந்த மார்ச்.25 ம் தேதி மஹாகும்பாபிவேகம் நடந்தது. அதனை தொடர்ந்து 48 நாட்களாக நடந்து வந்த மண்டலாபிஷேகம் நேற்று நிறைவு பெற்றது. இதனையொட்டி என்.எல்.சி., சேர்மன் பிரசன்னகுமார் மோட்டுப்பள்ளி, கோயில் கும்பாபிஷேக விழா மலரை வெளிட்டு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்வை துவக்கி வைத்தார். வேலுடையான்பட்டு கோயில் அறங்காவலர் குழுவின் தலைவர் அண்ணாதுரை, என்.எல்.சி., முதன்மை பொது மேலாளர் திருக்குமார், துணை பொது மேலாளர் ராமமூர்த்தி. இந்து சமய நிலைத்துறை அதிகாரிகள், விழா உபயதாரர்கள் மற்றும் வேலடையான்பட்டு கிராமவாசிகள் சார்பில் முருகபெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், சிறப்பு யாகங்கள் நடந்தது. அதனை தொடர்ந்து பஞ்சமூரத்திகள் விதியுலா மற்றும் இன்னிசை கச்சேரியும் நடந்தது. முடிவில் மகா கும்பிஷேகம் சிறப்பாக நடந்தேறிட உதவிய அனைத்து தரப்பினருக்கும் நெய்வேலி வேலுடையான்பட்டு சிவசுப்பிரமணிய சுவாமி கோயில் அறங்காவலர்கள் குழுவின் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது. புட் நோட் ; நெய்வேலி வேலுடையான்பட்டு முருகன் கோயிலில் நடந்த மகா கும்பாபிஷேகத்தையொட்டி நடந்த மண்டலாபிஷேக நிறைவு நாளில் என்.எல்.சி., சேர்மன் பிரசன்னகுமார் மோட்டுப்பள்ளி விழா மலரை வெளியிட்டார். அருகில் கோயில் அறங்காவலர்கள்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !