உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / புதுார் மாரியம்மன் கோவில் திருவிழா கொடியேற்றம்

புதுார் மாரியம்மன் கோவில் திருவிழா கொடியேற்றம்

புதுார் மாரியம்மன் கோவில் திருவிழா கொடியேற்றம்பாலக்கோடு,: தர்மபுரி மாவட்டம் பாலக்கோட்டில், பிரசித்தி பெற்ற புதுார் மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் திருவிழா பாரம்பரிய முறைப்படி, ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதம், பவுர்ணமியை முன்னிட்டு வெகு விமர்சையாக நடப்பது வழக்கம். இந்த ஆண்டு வரும் பிப்ரவரி மாதம், 10ம் தேதி தொடங்கி, 14 வரை இந்த கோவில் திருவிழா நடக்கிறது. இதையொட்டி, புதுார் மாரியம்மன் கோவில் வளாகத்தில் நேற்று காலை பாரம்பரிய முறைப்படி கொடி கம்பத்துக்கு பூஜை செய்து, பந்தக்கால் நட்டு கொடியேற்றி விழாவினை ஊர் கவுண்டர் முருகேசன் துவக்கி வைத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ