உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / பிளாஸ்டிக் இல்லா தமிழகம் மாணவர்கள் விழிப்புணர்வு

பிளாஸ்டிக் இல்லா தமிழகம் மாணவர்கள் விழிப்புணர்வு

'பிளாஸ்டிக் இல்லா தமிழகம்' மாணவர்கள் விழிப்புணர்வுபாப்பிரெட்டிப்பட்டி :பாப்பிரெட்டிப்பட்டி அருகே பொ.மல்லாபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில், மாவட்ட சுற்றுச்சூழல் மற்றும் தேசிய பசுமைபடை இணைந்து, 3 நாட்கள் இயற்கை முகாம் நடத்தி வருகிறது. இதில், ஒரு நாள் சிறப்பு நிகழ்வாக, அரூர் அடுத்த தீர்த்தமலையில், 'பிளாஸ்டிக் இல்லா தமிழகம்' குறித்த விழிப்புணர்வு பிரசாரம் நடந்தது. இதில் சுற்றுச்சூழல், பசுமை படை மாணவர்கள், பிளாஸ்டிக் இல்லாத தமிழகத்தை உருவாக்குவோம் என, கோஷங்கள் எழுப்பி, துண்டு பிரசுரங்கள் வழங்கி பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.இதில், தீர்த்தமலை அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் அருள்முருகன், தர்மபுரி மாவட்ட சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் வேலு, ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ