தேர்தலில் வாக்களிப்பதன் அவசியம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு
தர்மபுரி, தர்மபுரி பழைய அலுவலக வளாகத்தில், சட்டசபை தேர்தலில், 100 சதவீதம் ஓட்டுபோடுவதின் அவசியம் குறித்து, காஸ் சிலிண்டர்களில் ஸ்டிக்கர்களை ஒட்டி, மாவட்ட கலெக்டர் சதீஸ், விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.தமிழகத்தில், ஏப்., 23ல் சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளது. இதையொட்டி தேர்தலில், 100 சதவீதம் ஓட்டுபோடுவதின் அவசியம் குறித்து, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அந்தவகையில், தேர்தல் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய ஸ்டிக்கர்களை, சமையல் காஸ் சிலிண்டர்களில் ஒட்டி, மாவட்ட கலெக்டர் சதீஸ், விழிப்புணர்வு ஏற்படுத்தினார். தொடர்ந்து, கல்லுாரி மாணவ, மாணவியர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், 'என் வாக்கு, என் உரிமை' என்ற 'சூப்பர் சுட்டி ஸ்டிக்கர்'களை வழங்கி, விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.இதில், மகளிர் திட்ட அலுவலர் சுந்தர்ராஜன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் கவிதா, பாப்பிரெட்டிப்பட்டி சட்டசபை தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் கோவிந்தன், தாசில்தார் சுகுமார் உட்பட தொடர்புடைய அலுவலர்கள், கல்லுாரி மாணவ, மாணவியர் பலர் கலந்து கொண்டனர்.