மேலும் செய்திகள்
மாவட்ட கண்காணிப்பு குழு கூட்டம்
26-Feb-2025
பென்னாகரம்: தர்மபுரி மாவட்டம், பென்னாகரத்தில் மகளிர் தினத்தை-யொட்டி, மகளிருக்கு பாராட்டு விழா நேற்று நடந்தது. பென்னா-கரம், பா.ம.க., - எம்.எல்.ஏ.,வான ஜி.கே.மணி ஏற்பாட்டில் நடந்த நிகழ்ச்சிக்கு, மாவட்ட கலெக்டர் சதீஸ் தலைமைவகித்தார். கூடுதல் கலெக்டர் கேத்ரின் சரண்யா முன்னிலை வகித்தார். மாவட்டத்தில் பணிபுரியும் பெண் அலுவலர்கள் டி.ஆர்.ஓ., கவிதா, ஆர்.டி.ஓ., காயத்திரி, மாவட்ட மகளிர் அலுவலர் லலிதா, சி.இ.ஓ., ஜோதிசந்திரா, மருத்துவ இணை இயக்குனர் சாந்தி உள்-ளிட்ட அனைத்து துறையிலும் பணிபுரியும் பெண்களை அழைத்து, அவர்களின் பணிகளை பாராட்டி, கேடயங்கள் வழங்கி கவுரவிக்கப்பட்டனர். பென்னாகரம் சட்டசபை தொகுதியில் சிறப்பாக பணியாற்றிய கல்வி, மருத்துவம், அங்கன்வாடி, சுய உதவிக்குழுக்கள், துாய்மை பணியாளர்கள் உள்ளிட்ட அனைத்து அரசு துறைகளிலும் சிறப்-பாக பணியாற்றும் பெண்களை பாராட்டி, கலெக்டர் சதீஸ் மற்றும் ஜி.கே.மணி எம்.எல்.ஏ., ஆகியோர் நற்சான்றிதழ்களை வழங்கி கவுரவித்தனர்.
26-Feb-2025