உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / ரூ.4.10 லட்சத்துக்கு பருத்தி ஏலம்

ரூ.4.10 லட்சத்துக்கு பருத்தி ஏலம்

ரூ.4.10 லட்சத்துக்கு பருத்தி ஏலம்அரூர்: அரூர், ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில், நேற்று, 4.10 லட்சம் ரூபாய்க்கு பருத்தி ஏலம் நடந்தது. தர்மபுரி மாவட்டம், அரூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், நேற்று, இ-நாம் மூலம் பருத்தி ஏலம் நடந்தது.இதில், 25 விவசாயிகள், 50 குவிண்டால் பருத்தியை விற்பனைக்கு கொண்டு வந்தனர். இதில், ஆர்.சி.எச்., ரகம் குவிண்டால், 7,100 முதல், 7,316 ரூபாயும், டி.சி.எச்., ரகம் குவிண்டால், 9,000 முதல், 9,009 ரூபாய் வரை விற்பனையானது. மொத்தம், 50 குவிண்டால் பருத்தி, 4.10 லட்சம் ரூபாய்க்கு விற்பனையானதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ