உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / காணியம்மன் கோவிலில் ரூ.4.71 லட்சம் காணிக்கை

காணியம்மன் கோவிலில் ரூ.4.71 லட்சம் காணிக்கை

பாப்பிரெட்டிப்பட்டி, ஆக. 24-இருளப்பட்டி காணியம்மன் கோவில் உண்டியலில் 4.71 லட்சம் ரூபாய், 31 கிராம் தங்கத்தை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தினர்.தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த இருளப்பட்டியில் காணியம்மன் கோவில் உள்ளது. ஆண்டுதோறும் ஆவணி மாதத்தின், முதல் புதன்கிழமையில் தேரோட்டம் நடக்கும். தேர் திருவிழா முடிந்தவுடன் உண்டியல் திறக்கப்பட்டு காணிக்கை எண்ணப்படும். இந்நிலையில் கடந்த, 21ல் ஆவணி தேரோட்டம் விமர்சையாக நடந்தது. இதையடுத்து, நேற்று உண்டியல் திறக்கப்பட்டு காணிக்கை எண்ணப்பட்டது.உண்டியலில் பக்தர்கள் செலுத்திய காணிக்கையாக, 4.71 லட்சம் ரூபாய் மற்றும் குத்துவிளக்கு, 31 கிராம் தங்கம் இருந்தது. ஹிந்து அறநிலையத்துறை அலுவலர்கள் மூலம் காணிக்கை கருவூலத்தில் செலுத்தப்பட்டது. இருளப்பட்டி பஞ்., தலைவர் குமார், முன்னாள் சேர்மன் சின்னப்ப கவுண்டர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ