உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / விஷ்ணு பரிவர்த்தன ஏகாதசி பெருமாள் கோவில்களில் பூஜை

விஷ்ணு பரிவர்த்தன ஏகாதசி பெருமாள் கோவில்களில் பூஜை

விஷ்ணு பரிவர்த்தன ஏகாதசிபெருமாள் கோவில்களில் பூஜைதர்மபுரி, செப். 15-விஷ்ணு பரிவர்த்தன ஏகாதசி தினத்தையையொட்டி, தர்மபுரியில் உள்ள பல்வேறு பெருமாள் கோவில்களில் நேற்று சிறப்பு பூஜை நடந்தது.சயன ஏகாதசி தினத்தன்று, விஷ்ணு சற்று புரண் படுப்பதை பரிவர்த்தன ஏகாதசி என்று சொல்வர். அதன்படி நேற்று பரிவர்த்தன ஏகாசி தினம் கடைபிடிக்கப்பட்டது. இதில், தர்மபுரி அடுத்த வரதகுப்பம் வெங்கட்ரமண சுவாமிக்கு பால், பன்னீர், சந்தனம், இளநீர், குங்குமம் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்களால் அபி ேஷகம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். பின், சுவாமிக்கு வெள்ளி கவச அலங்காரம் செய்யப்பட்டது. இதேபோல், தர்மபுரி அபய ஆஞ்நேயர் கோவில், கடைவீதி பிரசன்ன வெங்கட்ரண சுவாமி கோவில், பழைய தர்மபுரி லட்சுமி நரசிம்மர் கோவில், செட்டிக்கரை சென்றாய பெருமாள் கோவில் உள்பட மாவட்டம் முழுவதும் உள்ள பெருமாள் கோவில்களில் பரிவர்த்தன ஏகாதசி நிகழ்ச்சி நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை