உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / விநாயகர் சிலை வைக்க ஆலோசனை கூட்டம்

விநாயகர் சிலை வைக்க ஆலோசனை கூட்டம்

ஊத்தங்கரை: ஊத்தங்கரையில் விநாயகர் சிலை வைப்பது குறித்த ஆலோசனை கூட்டம், பேரூராட்சி மண்டபத்தில் நேற்று நடந்தது. இதில், மத்துார், சிங்காரப்பேட்டை, கல்லாவி, சாமல்பட்டி போலீஸ் எல்-லைக்கு உட்பட்ட கிராமங்களில், விநாயகர் சதுர்த்தியில் சிலை வைத்து, பாதுகாப்பது மற்றும் சிலைகள் கரைக்கும் நாளில் கடை-பிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்து, விநாயகர் சிலை வைப்-பவர்களுடன் ஆலோ-சனை கூட்டம் நடந்தது.ஊத்தங்கரை டி.எஸ்.பி., சீனிவாசன் தலைமை வகித்து பேசு-கையில், ''களிமண் சிலைகளை மட்டுமே வைக்க வேண்டும். பாதுகாப்பு கமிட்டி அமைத்து, சிலைகளை பாதுகாத்து கொள்ள வேண்டும். எளிதில் தீப்பிடிக்கும் பொருட்களை, சிலை அருகே வைக்கக்கூடாது. பூஜை நேரங்களில் மட்டுமே அனுமதித்த அளவு ஒலிபெ-ருக்கியை பயன்படுத்த வேண்டும். கண்கா-ணிப்பு கேமராக்களை கண்டிப்பாக பொருத்த வேண்டும். எக்கார-ணத்தை கொண்டும் தேசிய நெடுஞ்சாலைகளில், விநாயகர் சிலைகளை ஊர்வலமாக எடுத்து செல்லக்கூடாது,'' என்றார். இதில், இன்ஸ்பெக்டர்கள் ஊத்தங்கரை முருகன், கல்லாவி ஜாபர்-உசேன், சிங்காரப்பேட்டை சந்திரகுமார், மத்துார் பாலமுருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை