மேலும் செய்திகள்
போதை பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு பேரணி
26-Aug-2024
தர்மபுரி: தர்மபுரியில், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில், புகை, மது, போதைக்கு எதிரான, விழிப்புணர்வு பேரணி நேற்று நடந்தது. மாவட்ட துணைத்தலைவர் பாபு தலைமை வகித்தார். மாவட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். பேரணி கடைவீதி வழியாக சென்று பி.எஸ்.என்.எல்., அலுவலகம் அருகே நிறைவடைந்தது. இதில், போதை பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி சென்றனர்.
26-Aug-2024