தர்மபுரியில் லோக் அதாலத்: ரூ.18.51 கோடிக்கு தீர்வு
தர்மபுரி: தர்மபுரி மாவட்ட முதன்மை நீதிபதியும், மாவட்ட சட்டப்ப-ணிகள் ஆணைய தலைவருமான ஆனந்த் வெளியிட்டுள்ள அறிக்கை: தர்மபுரி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளா-கத்தில், தேசிய மக்கள் நீதிமன்றம் நடந்தது. இதே போன்று தர்ம-புரி மாவட்டத்தில் உள்ள அரூர், பாலக்கோடு, பென்னாகரம், பாப்பிரெட்டிப்பட்டி மற்றும் காரிமங்கலம் உள்ளிட்ட, ஐந்து தாலுகா நீதிமன்றத்திலும் நடந்தன. இதில், நீதிமன்றத்தில் நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள, 2,903 வழக்குகள் எடுத்துக் கொள்ளப்பட்டு, 1,544 வழக்குகள் சமரசம் பேசி தீர்க்கப்பட்டு, அதற்கான சமரச தொகை, 6.19 கோடி ரூபாய் மற்றும் வங்கி வாராகடன், 252 வழக்குகளும் சமரசம் பேசி தீர்த்து, 12.32 கோடி ரூபாய்க்கு முடிக்கப்பட்டன. மொத்தம், 3,155 வழக்குகள் எடுத்துக் கொள்ளப்பட்டு அதில், 1,785 வழக்குகள் சமரசம் பேசி தீர்க்கப்பட்டு அதற்கான சமரச தொகையாக, 18.51 கோடி ரூபாய்க்கான தீர்வு காணப்பட்டது. இதில், தீர்வு காணப்பட்டதற்-கான ஆணை வழக்குதாரர்களுக்கு வழங்கப்பட்டது.குடும்ப நல நீதிபதி கீதாராணி, கூடுதல் மாவட்ட நீதிபதி மோனிகா, சிறப்பு மாவட்ட நீதிபதி ராஜா, மகிளா நீதிபதி சுரேஷ், தலைமை குற்றவியல் நீதிபதி சந்தோஷ், கூடுதல் சார்பு நீதிபதி பாலகிருஷ்ணன், கூடுதல் மகிளா நீதிபதி மதுவர்ஷினி மற்றும் மூத்த வக்கீல்கள் கலந்து கொண்டனர்.