உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / என்.எஸ்.எஸ்., திட்ட முகாம்

என்.எஸ்.எஸ்., திட்ட முகாம்

பாப்பிரெட்டிப்பட்டி: தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அரசு ஆண்கள் மேல்-நிலைப்பள்ளியில் என்.எஸ்.எஸ்., திட்ட முகாமையொட்டி அரூர் வனசரகத்திற்க்குட்பட்ட போடுவராயன் பெருமாள் மலை கோவில் பகுதியில் மழை ஏற்ற பயிற்சியும், மலைப்பாதையில் கிடந்த நெகிழிப்பைகள் உள்ளிட்ட பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றி துாய்மை பணி நிகழ்ச்சி நடந்தது. தலைமை ஆசிரியர் கலைவாணன் தலைமை வகித்தார். அரூர் வனச்சரகர் வெங்கடேசன், வனவர் இளையராஜா, வனக்-காப்பாளர்கள் வீகன் குமார் வெற்றிவேல், வன காவலர் சுஜி முன்-னிலை வகித்தனர். இந்த மலை பயிற்சியில் இயற்கை சூழலில் முக்கியத்துவம், வனப்பகுதிகளை பாதுகாப்பதன் அவசியம், சுற்றுச்சூழலை துாய்-மையாக பராமரிக்க வேண்டிய பொறுப்பு குறித்து, மாணவர்க-ளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. திட்ட அலுவலர் திலீப்-குமார், உதவி திட்ட அலுவலர் பார்த்தீபன் ஒருங்கிணைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை