உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / 100 சதவீதம் ஓட்டளிக்க மக்களிடம் விழிப்புணர்வு

100 சதவீதம் ஓட்டளிக்க மக்களிடம் விழிப்புணர்வு

பாப்பிரெட்டிப்பட்டி, பாப்பிரெட்டிப்பட்டி, சட்டசபை தேர்தலில் ஓட்டளிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி, பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த பி.பள்ளிப்பட்டியில் தாசில்தார் பார்வதி தலைமையில் நடந்தது. சட்டசபை தேர்தலில் வாக்காளர்கள், 100 சதவீதம் ஓட்டு போடுவதன் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில், விழிப்புணர்வு நிகழ்ச்சி பி.பள்ளிப்பட்டி புனித லுார்து அன்னை ஆலய வளாகத்தில் நேற்று நடந்தது.இதில், தவறாமல் ஓட்டளிப்பேன். என் ஓட்டு விற்பனைக்கல்ல. என் ஓட்டு என் உரிமை என்பன உள்ளிட்ட விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்கள், ஸ்டிக்கர்களை பொதுமக்களிடம் தாசில்தார் பார்வதி வழங்கி, விழிப்புணர்வு ஏற்படுத்தினார். நிகழ்ச்சியில் தேர்தல் துணை தாசில்தார் சுதேஸ்வரி, மண்டல துணை தாசில்தார் சிவஞானம், முதுநிலை ஆர்.ஐ., கார்த்திக் உள்ளிட்ட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி