உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / 2 டாஸ்மாக் கடைகள் மூடல்

2 டாஸ்மாக் கடைகள் மூடல்

கம்பைநல்லுார்; தமிழக அரசின் உத்தரவுப்படி, கம்பைநல்லுாரில் செயல்பட்டு வந்த, 2 டாஸ்மாக் கடைகள் நேற்று மூடப்பட்டன.தமிழக முதல்வர் விஜய் தலைமையிலான அரசு, தமிழகம் முழுவதும், வழிபாட்டு தலங்கள், கல்வி நிறுவனங்கள், பஸ் ஸ்டாண்ட் உள்ளிட்ட பகுதிகளில் செயல்பட்ட, 717 அரசு டாஸ்மாக் மதுபான கடைகளை மூட கடந்த, 11ம் தேதி உத்த-ரவிட்டது. மேலும், சந்துக்கடை மது விற்ப-னையை தடுக்க, மாவட்ட போலீசாருக்கு அறிவு-றுத்தப்பட்டது. தர்மபுரி மாவட்டத்தில், 67 அரசு டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வந்தது. இந்த டாஸ்மாக் கடைகளை ஒட்டி, அரசு அனுமதி பெற்ற பார்கள், சில இடங்களில் தனியாருக்கு சொந்தமான பார்கள் இயங்கி வருகின்றன. நேற்று முன்தினம், தர்மபுரியில், 3 டாஸ்மாக் கடைகள், பாப்பிரெட்டிப்பட்டி தாலுகா வெங்கடசமுத்தி-ரத்தில், 2 கடைகள் என, மொத்தம், 5 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன. இந்நிலையில் நேற்று கம்பைநல்லுார் பஸ் ஸ்டாண்ட் அருகில் இருந்த ஒரு கடை மற்றும் செம்மனஅள்ளி பிரிவு சாலையில் இருந்த ஒரு கடை என, மொத்தம், 2 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை