உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / ரூ.3.10 லட்சம் அபராதம் வசூல்

ரூ.3.10 லட்சம் அபராதம் வசூல்

தர்மபுரி, ஜன. 2-தர்மபுரி நான்கு ரோட்டில், கடந்த டிசம்பர் மாதத்தில் மட்டும், 3.10 லட்சம் ரூபாய் வாகன ஓட்டிகளிடமிருந்து அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.தர்மபுரி, நான்கு ரோடு ரவுண்டானாவில் போக்குவரத்து போலீஸ் ஸ்டேஷன் உள்ளது. இதில், எஸ்.ஐ., சின்னசாமி, சதீஸ், கோமதி, எஸ்.எஸ்.ஐ., ரகுநாதன் உள்ளிட்ட போலீசார் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில், டிசம்பர் மாதத்தில் இவர்கள் தர்மபுரி நான்டு ரோடு பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டு வந்தனர். ஹெல்மெட் அணியாமல் சென்றது, இரண்டு நபருக்கு மேல் பைக்கில் சென்றது, மது அருந்திவிட்டு பைக் ஓட்டிய நபர்கள் மற்றும் காரில் சீட் பெல்ட் அணியாமல் கார் ஓட்டியவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து அபராதம் விதித்து வந்தனர். இந்நிலையில், கடந்த டிசம்பர் மாதத்தில் மட்டும் பல்வேறு வழக்குகளில், 1,765 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மேலும், இவர்களிடம் இருந்து, 3.10 லட்சம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ