உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / ரூ.5.69 லட்சத்திற்கு கொப்பரை இ--நாம் முறையில் விற்பனை

ரூ.5.69 லட்சத்திற்கு கொப்பரை இ--நாம் முறையில் விற்பனை

கிருஷ்ணகிரி: போச்சம்பள்ளி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், இ--நாம் முறையில் கொப்பரை தேங்காய் ஏலம் நடந்தது. இதில், 4,343 கிலோ கொப்பரை தேங்காய்கள், கிலோ ஒன்றுக்கு அதிகபட்சம், 149.90 ரூபாய்க்கும், குறைந்தபட்சம், 80 ரூபாய்-க்கும், சராசரியாக கிலோ ஒன்று, 142.99 ரூபாய்-க்கும் விற்பனையானது. அதன்படி, 5.69 லட்சம் ரூபாய்க்கு கொப்பரை விற்பனையானது.இதுகுறித்து போச்சம்பள்ளி ஒழுங்குமுறை விற்பனைகூட கண்காணிப்பாளர் அருள்வேந்தன் கூறுகையில், ''இங்கு தேசிய மின்னணு வேளாண் சந்தை (இ--நாம்) முறையில், விவசாய விளை பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது. இதில், பல்வேறு மாவட்ட வியாபாரிகள் கலந்து கொண்டனர்.இ--நாம் முறையில் நடந்த ஏலத்தில், கொப்பரை தேங்காய் நல்ல விலைக்கு போனது. விற்பனை செய்த தொகை உடனடியாக விவசாயிகளின் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டது. மேலும், கொப்பரை, பருத்தி மட்டுமின்றி, நெல் ஏலமும் மின்னணு வர்த்தக முறையில் நடக்க உள்ளதால், நெல் விவசாயிகள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளலாம்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !